”நாடே ஒன்றாக” தேசிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2024, 2025 மற்றும் 2026 இன் கடந்துபோன காலப்பகுதியில் இந்தச் சிவப்பு எச்சரிக்கைகள் மூலம் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் பேரில் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களை அரசுடமையாக்கும் விசேட திட்டமொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபா மதிப்பிலான சொத்துக்களையும், 2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபா மதிப்பிலான சொத்துக்களையும் அரசாங்கம் பொறுப்பேற்பதன் மூலம், அந்தச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபா மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment