Ads (728x90)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று 17 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை 8.15 அளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

மகோற்சவத் திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 26ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா செப்ரெம்பர் 07ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா செப்ரெம்பர் 09ஆம் திகதி காலையும், மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழா இடம்பெற்று, மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும் என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget