குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அந்தப் புத்தகங்களை பியகம பகுதியில் பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவ்வாறு வாங்கப்பட்ட புத்தகங்கள் பேலியகொட பகுதியில் உள்ள காகிதங்களை அரைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, அரைக்கப்பட்ட பின்னர் சில நாட்களில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
புத்தகத் தொகுதி சரியாக ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்ததையடுத்து, இசுருபாய கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் என்.டபிள்யூ.டி. ஹிரோஷி குணவர்தன அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலங்கம காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து 31 வயதுடைய சந்தேகநபரான பாரவூர்தி சாரதியைக் கைது உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.jpeg)
Post a Comment