Ads (728x90)

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் மற்றும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவரும் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார்.

இவர் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரும் அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.

ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Recent News

Recent Posts Widget