Ads (728x90)

மஹர சிறைச்சாலையில் இன்று பிற்பகல் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இந்நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ராகம பொலிஸ் பிரிவின் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இப்பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget