Ads (728x90)

2026 பொதுநலவாய தடகளப் போட்டியில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வென்ற முதலாவது பொதுநலவாய போட்டி தங்கப் பதக்கம் இதுவாகும்.

76 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் கிடைத்த முதலாவது தங்கமாகவும் இது அமைகின்றது.

உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ருமேஷ், ஈட்டி எறிதலில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த முதலாவது பொதுநலவாய போட்டியிலான தங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டு பளுதூக்கும் போட்டியில் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றிருந்தமையே இதற் முன்னரான பொதுநலவாய இலங்கைக்கான தங்கப் பதக்க சாதனையாக இருந்தது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget