Ads (728x90)

2025/2026 வரி மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் கீழ் வரி விதிக்கப்படாது என இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய தெரிவித்துள்ளார். 

டிஜிட்டல் ஊடகம் அல்லது ஏனைய வழிமுறைகள் ஊடாக சேவைகளை ஏற்றுமதி செய்து ஈட்டப்படும் வருமானத்திற்கு அதிகபட்சமாக 15 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கமைய, டிஜிட்டல் ஊடகங்கள் ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள், தாம் ஈட்டும் வருமானத்தை சுயமதிப்பீட்டு வரி அறிக்கையின் மூலம் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget