Ads (728x90)

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ருமேஷ் தரங்க, கோப்ரல் பதவி நிலையில் இருந்து சார்ஜென்ட் பதவி நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ருமேஷ் தரங்க, ஈட்டி எறிதல் போட்டியில் உலக சம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். 

தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்த அவரது இணையற்ற திறமையையும், அவரது முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால் கோப்ரல் பதவி நிலையில் இருந்து சார்ஜென்ட் பதவி நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இந்நிகழ்வு இன்று விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget