Ads (728x90)

ஜனாதிபதி செயலக பணிக்காக ஆட்சேர்ப்பு செய்து, தனது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கல்வி அமைச்சரும் ஐ.தே.க. முன்னாள் பொதுச் செயலாளருமான அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து இடம்பெற்று வந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் மற்றும்  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget