ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. ஜூன் மாதத்தில் 24,440 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றிருந்தனர்.
இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
.jpeg)
Post a Comment