அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தற்போது இடம்பெற்றுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள், இவ்விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மரணதண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியங்களைப் பெறல் என்பன பற்றி ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, செம்மணி மனிதப்புதைகுழியில் தற்போதுவரை 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருப்பதுடன், ஓகஸ்ட் 19 ஆம் திகதி புதன்கிழமை வரை அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
.jpeg)
Post a Comment