Ads (728x90)

வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் முதலாம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் டொலர் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளன.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷெனான் கவ்லின் ஆகியோர் நேற்று கொழும்பு பொதுத் திறைசேரியில் இக்கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இம்முதலீடு மற்றும் கைத்தொழில் திட்டத்திற்காக 200 மில்லியன் டொலர் கொள்கை சார்ந்த கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.

இத்திட்டம் கடந்துபோன 2025 தேசிய கொள்கைக் கட்டமைப்புடன் இணங்கிச் செல்வதுடன், நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டம் இரண்டு உப திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget