வளைகுடா நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல நாடுகள் தன்னிடம் தொடர்பு கொண்டு ஈரானுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டதுடன், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ஒப்பந்தத்தின் முதல் கட்டமாகச் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
.jpeg)
Post a Comment