இலங்கையின் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் புதிய விடுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் ரூபா 231 மில்லியன் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உப்பாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.மேலும், பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.


Post a Comment