Ads (728x90)

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன், நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 68 மாணவர்கள், வவுனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் என மொத்தம் 76 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூபா 1 இலட்சம் பெறுமதியான காசோலைகளும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதமர் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் நலன்களை கேட்டறிந்ததுடன், கல்விப் பயணத்திற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget