நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் வழியாகப் பாயும் ஆறுகளில் உடல்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நான்கு உடல்களும், சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் மூன்று உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உடல்களை அடையாளம் காண அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெள்ளப் பேரழிவில் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் முழுவதும் 2,400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
23.jpeg)
Post a Comment