Ads (728x90)

கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை அதிகரிப்பை மேற்கொள்ள, கோதுமை மா இறக்குமதி செய்யும் இந்நிறுவனங்கள் .தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோதுமை மா விலை அதிகரிப்படும் நிலையில், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை தமது மத்திய குழு கூடி ஆராயவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget