யாழ்ப்பாணத்துக்கென தனித்துவமான உணவும், சுவையும் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறோம். இந்த உணவுத் திருவிழா ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மட்டுமன்றி, வடக்கின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கான மறைமுக அழைப்பாகவும் அமைகிறது.
சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு வகைகளையும் அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியப் பண்புகளையும் அறிமுகப்படுத்துவதற்கு இவ்வுணவுத் திருவிழா சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் மற்றும் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ. சோதிநாதன், வட மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே. விவேகானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கலாசார மற்றும் உணவுத் திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது.
11.jpeg)
.jpeg)
Post a Comment