ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
அதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர பதிலளிப்புப் பிரிவு, தரவு பாதுகாப்பு அதிகாரசபை, GovTec நிறுவனம், இலங்கை டெலிகொம் - மொபிடெல் நிறுவனம், கொழும்பு தாமரைக் கோபுரம் நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ்ச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் தனித்தனியாக ஆராயப்பட்டது.இந்த ஆண்டின் இறுதியில் டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவது தொடர்பான செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வினவினார். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து வாகனத் தண்டப்பணங்களையும் இணையம் (ஒன்லைன்) மூலம் மாத்திரம் செலுத்துவதற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.


Post a Comment