Ads (728x90)

பயணிகள் ட்ரோன் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

முதற்கட்டத் திட்டத்தின் கீழ், இந்த பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களை இலக்காகக் கொண்ட இரண்டு வான்வழி மார்க்கங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்து தெற்கு கடற்கரை பிரதேசத்திலுள்ள இடங்கள் வரையிலும், கட்டுநாயக்கவில் இருந்து துறைமுக நகரம் வரையிலும் ட்ரோன் சேவை முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், அவசர அனர்த்த சேவைகளுக்காக பயன்படுத்துதல் மற்றும் கடல்சார் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ட்ரோன் சேவை அறிமுகம் செய்யப்படுவதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்து ட்ரோன்கள் தானியக்க முறையில் இயக்கப்படுவதுடன், அதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் சீனாவைச் சேர்ந்த EHang நிறுவனத்துடன் இணைந்து புதிய பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget