இதற்கமைய, 2026/2027 ஆண்டிற்கான உரிய விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கடன் தொகையாக ரூபா 1,500,000 வரை வழங்கப்படுகிறது.
இக்கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஒரு மாணவர், 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129 இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment