Ads (728x90)

எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கு ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதியைப் பெறும் போது, மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பிக்கும் போது TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. 

அத்துடன், காணி அல்லது காணியின் உரிமையைப் பதிவு செய்யும் போது, வியாபாரத்தைப் பதிவு செய்யும் போது, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் போது மற்றும் கடன் அட்டையைப் பெறும் போதும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பதும் கட்டாயமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நீங்கள் இதுவரை TIN இலக்கத்தினைப் பெறவில்லை என்றால், TIN இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget