Ads (728x90)

ஜப்பானில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டம் செய்யத் தீர்மானித்தது.

அதனைத் தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா, மற்றும் ஷபாலி வர்மா ஜோடி, 99 ஓட்டங்களைப் பெற்றதோடு, ரி20 சர்வதேசப் போட்டிகளில் 4,000 ஓட்டங்களை கடந்த முதல் ஜோடியாகவும் சாதனை படைத்தது. ஸ்மிருதி மந்தனா 79 ஓட்டங்களைப் பெற்றதோடு, சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.  

அதனைத் தொடர்ந்து, நான்காவது வரிசையில் களமிறங்கிய ரிச்சா கோஷ், 22 பந்துகளில் அதிரடியாக 49 ஓட்டங்களை குவிக்க, இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை எட்டியது.

இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற நான்கு தொடர்களில் மகளிர் ரி20 கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்ட முடியாமல் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து படுதோல்வியைத் தழுவியது. 10 ஓவர்களுக்குள் இலங்கை 49 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

இது நடைபெற்ற 10 தொடர்களில் இந்தியா வென்ற எட்டாவது ஆசியக் கிண்ணமாகும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget