Ads (728x90)

மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான பரிந்துரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்துடன், நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, பெருமாள் சிவகுமார், ஆனந்தி கனகரத்னம், ஞானேச லலித் கன்னங்கர ஆகிய நீதிச்சேவை அதிகாரிகள், மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி நாளை நியமிக்கவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி, அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget