Ads (728x90)

டுபாயில் இன்று நடைபெற்ற ரி20 மகளிர் ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

ஆரம்ப துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய ஷபாலி வர்மா 68 ஓட்டங்களையும், சுமிர்த்தி மந்தனா 59 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மிதாலி அயோதா, சமதி அத்தபத்து, சமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இந்நிலையில் 184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 8வது முறையாக ஆசியக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget