ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 10ம் திகதி வெளிவந்துள்ளது.
இதுவரை தமிழ் சினிமா அதிகம் காணாத பாய்மர படகு போட்டியை பற்றி இப்படம் பேசியுள்ளது.
படத்தை சூரி தாங்கியுள்ளார் என்றே கூறலாம், அவரின் அறிமுகம் முதல் இறுதி வரை தனது நடிப்பின் மூலம் படத்தை தாங்கியிருக்கிறார். படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக வந்த சூரி, இன்று உச்சம் நோக்கி பயணிக்கிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை, மாமன், கருடன் என அனைத்து படங்களும் ஹிட் ஆக தற்போது வெளிவந்த மண்டாடி படமும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்த படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து சூரி அடுத்து சென்னை வெள்ளத்தை மையமாக வைத்து அயலான் இயக்குனர் ரவிகுமார் இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
11.jpeg)
Post a Comment