Ads (728x90)

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, மின்னணு பணப் பரிமாற்றங்கள் ஊடாக 24.85 பில்லியன் ரூபா பெறுமதியான டொலர் இருப்புகளை நாட்டிற்கு வெளியே அனுப்ப உதவி புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, தந்திக் பரிமாற்றம் (TT) மூலமாக இந்த வெளிநாட்டுச் செலாவணிகள் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் எந்தவொரு பொருளும் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படவில்லை.

அவர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் ஒக்டோபர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 89 நிறுவனங்கள், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காண்பித்து, மின்னணு பணப் பரிமாற்றங்கள் மூலம் டொலர் இருப்புகளை நாட்டிற்கு வெளியே அனுப்பியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget