இதன்மூலம் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட இலங்கை தகுதிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணியின் தலைவி பாத்திமா சானா ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் சமரி அத்தபத்து மற்றும் சமுதி ப்ரபோதா தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் ஹர்ஷித்தா சமரவிக்ரம அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் பாத்திமா சானா 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
.jpeg)
Post a Comment