Ads (728x90)

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ நோயாளர் அறை தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு நெய்யப்பட்டுள்ளது. 

தொற்றா நோய்கள் (NCD) காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்படும் மரணங்களைக் குறைப்பதற்கும், 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களைத் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தும் வேகத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதற்கும் இந்த புதிய வாட் தொகுதி பயன்படும்.

இந்தத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை வழங்கும் செயற்பாட்டை வலுப்படுத்தும் என்பதுடன், அதற்காக பங்களிப்பு வழங்கிய இந்தியப் பிரதமர் தலைமையிலான இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த புதிய நோயாளர் அறைத் தொகுதி பல நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோக கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget