சிலாபம் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த முற்றுகையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் அளவு 211.8 கிலோ கிராம் என்பதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையின்படி அதில் தூய ஹெரோயினின் அளவு 136.99 கிலோ கிராம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
.jpeg)
Post a Comment