2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.
இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்த மாதம் 9ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இப்பரீட்சைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அவர்களில் சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment