இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் மற்றும் யோகோஹாமா (Yokohama) நகர மக்கள் இணைந்து, 7 நவீன தாழ்தளப் பேருந்துகளை (Low-floor buses) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
செப்டம்பர் 2, 2026 அன்று கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாதா இப்பேருந்துகளை இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Post a Comment