கடவத்தை மெட்ரோ டிப்போவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், மேலும் 50 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பேருந்து சேவை மேல் மாகாணத்திற்கு அப்பால் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறையினரும் இந்த சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment