Ads (728x90)

தலைமன்னார் கடல் பகுதியில் மணல் திட்டில் தவித்த 8 இலங்கை அகதிகள் இலங்கை கடற்படையினரால் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கடற்படையினர் மேற்கொண்ட வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போதே மணல்திட்டத்தில் சிக்கியிருந்த இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதி முகாம்களிலிருந்து இராமேஸ்வரம் ஊடாக படகு மூலம் இவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் முன்னதாக இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட கடல் பயணத்தால் சோர்வடைந்திருந்த இவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிட வசதிகளை கடற்படையினர் உடனடியாக வழங்கி மனிதநேய உதவி அளித்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget