குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த திருத்தச் சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், அடிப்படை மனித உரிமைகளும் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இவை இரண்டு நாட்களாக நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானதா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
.jpeg)
Post a Comment