பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களுக்கு அவமானம், மன உளைச்சல் அல்லது அசௌகரியம் ஏற்படும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அமைச்சு தெளிவான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்படி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
.jpeg)
Post a Comment