காலணிகளுக்குள் போதைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே சிறைச்சாலையில் பணிபுரியும் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஆவார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வாயிலில் சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியையும் மேல் நடவடிக்கைக்காக பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
.jpeg)
Post a Comment