Ads (728x90)

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஸ்வென் சைமன் தலைமையிலான குழுவினர், பாராளுமன்ற சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட வரிச்சலுகைத் திட்டமான ஜி.எஸ்.பி.பிளஸ் (GSP+) கட்டமைப்பின் கீழ் இலங்கையுடனான தொடர்ச்சியான ஈடுபாட்டை பாராட்டிய ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு, அந்தத் திட்டம் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச தரநிலைகளை மேம்படுத்துவதற்கும் வழங்கும் பங்களிப்பு குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்போது, பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், நல்லிணக்கம், மனித உரிமைகள், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேசிய மட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சபாநாயகர் ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவினருக்கு விளக்கமளித்துள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget