Ads (728x90)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமிருந்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள காணியொன்றை கிரிஷ் நிறுவனம் பெற்றுக்கொள்வதற்கும், அதற்குரிய அனுமதிகளை விரைவுபடுத்தி உதவி செய்வதற்காகவும் 3 சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குறித்த இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கடந்த 24 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், கொழும்பு நீதவான் நீதிமன்றினால் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget