Ads (728x90)


இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொறிமுறையை (OHCHR External Evidence Gathering Mechanism) ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி சுமித் தசநாயக்க, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக நாட்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய பொறிமுறைகளுக்கு பேரவை ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் தனித்துவமான சூழ்நிலைகள் மற்றும் நாட்டின் நிறுவன கட்டமைப்புகளை கருத்திற்கொண்டு, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான தேசிய முயற்சிகளுக்கு சர்வதேச சமூகமும், மனித உரிமைகள் பேரவையும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கும் அவசியமான சீர்திருத்தமாகவே 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget