இலங்கை பிரஜைகள் சிலர் தாய்லாந்தில் மேற்கொண்ட சட்டவிரோத செயல்களே இந்தச் சலுகை பறிபோனதற்கான முதன்மை காரணம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தாய்லாந்திற்கு நுழையும் போது விசா அற்ற நுழைவு வசதியை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரத்து செய்ய தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தாய்லாந்து நோக்கிப் பயணிக்கவிருக்கும் அனைத்து இலங்கையர்களும் தங்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்தின் இந்தத் தீர்மானம் குறித்து தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment