கடற்கரைப் பகுதியை ஐந்து வலயங்களாகப் பிரித்து, அங்குள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இரண்டாம் வலயத்தில் அமைந்துள்ள வெள்ளவத்தைக்கும் கல்கிசைக்கும் இடைப்பட்ட 83 கட்டடங்கள் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடற்கரையை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்தும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
கடல் அலையின் எல்லையிலிருந்து 10 மீற்றர் உட்பட்ட கரையோரப் பகுதிக்குள் எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும், 25 மீற்றர் வரையிலான பகுதி பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடவும், கூடவும் மற்றும் நீராடவும் உரிய பொது இடமாகும்.
எனவே, எந்தவொரு விடுதியோ அல்லது உணவகமோ இந்தப் பகுதிகளை வேலி அமைத்துத் தனியாருக்குச் சொந்தமானதாகவோ அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் உரித்தானதாகவோ உரிமை கோர முடியாது. கரையோரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டே அரசாங்கம் செயற்படுவதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதும் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு திணைக்களம் கட்டுப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpeg)
Post a Comment