மேரிலாந்தில் உள்ள ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானத் தளத்தை சென்றடைந்த சி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவானை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றுள்ளனர்.
சி ஜின்பிங்கின் இந்த விஜயத்தின்போது, இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சி ஜின்பிங் மேற்கொள்ளும் முதலாவது வாஷிங்டன் விஜயம் இதுவாகும். அத்துடன், ஆறு மாதங்களுக்குள் ட்ரம்ப் மற்றும் சி ஜின்பிங் இடையே நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாடாகவும் இது அமைகிறது.

Post a Comment