உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அருட்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் இத்தகைய பாரிய குற்றச் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருட்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
.jpeg)
Post a Comment