Ads (728x90)

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஆஜராகியுள்ளார். 

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்த அழைப்பிற்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.10 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget