“கனவு இலக்கு”(Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான தேர்வாக மாற்றி, பொதுமக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்து மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.இதன்போது கருத்துத் தெரிவித்த நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, மருதானை முதல் மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை ஆகிய மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து அமைப்புக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Post a Comment