Ads (728x90)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget