Ads (728x90)

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது வெற்றிடமாக காணப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க, சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக (மேலதிக மன்றாடியார் நாயகம்) பணியாற்றியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget