Ads (728x90)

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அதாவது, 2015 ஆம் ஆண்டில்தான் எயார்பஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சில தரப்பினர் ராஜபக்ஷக்களைப் பாதுகாப்பது ஏன்? என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எயார்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய விசாரணைகளுக்கு சாட்சியங்களை வழங்குவதற்காக எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் மூன்று தனித்தனிப் பயணங்களின் கீழ் நான்கு முறை இலங்கை வந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு நிதி மாற்றப்பட்டுள்ளதுடன், அந்தப் பணம் பின்னர் தொழிலதிபர் நிமல் பெரேராவைச் சென்றடைந்துள்ளது. தொழிலதிபர் நிமல் பெரேராவினால் 100 மில்லியன் ரூபா நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக இப்போது சாட்சியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் நாமல் ராஜபக்ஷவின் கைது குறித்த செய்தி சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியில் இருந்த காலப்பகுதியில், அதாவது 2015 ஆம் ஆண்டில்தான் எயார்பஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த விமான ஒப்பந்தம் அந்த நிர்வாகத்தின் காலத்தில்தான் இரத்துச் செய்யப்பட்டதுடன், ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமைக்காக மில்லியன் கணக்கில் அமெரிக்க டொலர் நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளது. விசாரணையானது தங்களது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப்பட்ட போதிலும், சில அரசியல் கட்சிகள் இப்போது ஏன் ராஜபக்சக்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget