கடந்த இரு தேர்தல்களின்போது மக்களுடன் இணைந்து, உலகிலேயே மிகக் கொடூரமான குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள் மற்றும் ஊழல் வாதிகளால் சூழப்பட்டிருந்த அரசியல் கும்பலை விரட்டியடித்தோம்.
தினமும் மாலைச் செய்திகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் கொடூரக் குற்றங்களின் தகவல்களே இதற்குச் சான்றாகும். அச்சமடைந்த குற்றவாளிகள் இன்று சட்டத்திற்குப் பயந்து ஒளிந்து வாழ்கின்றனர்.
கடந்த 22 மாதங்களாக எமது உறுப்பினர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவும், இளைஞர்களுக்காகவும் அர்பணிப்போடு உழைத்து வருகின்றனர். மக்கள் வழங்கிய பலமும் தைரியமுமே ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய சக்தியாக அமைந்தது.
சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும், அதன் தேவையையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எவ்வித அபாயத்தையும் எதிர்கொள்ளத் தான் தயார் என்றும், மக்கள் நலனுக்காகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பதவி விலக நேரிட்டாலும் அதற்கும் தயார் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நான் நேசிக்கும் மக்களுக்காகவே தான் இந்த நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இவ்வாறானதொரு தலைவரை மக்களாகிய நீங்களே உருவாக்கியுள்ளீர்கள்.
கடந்த காலங்களில் போதைப்பொருள் அல்லது ஊழலுக்கு எதிராகப் பேசினால் வெள்ளை வேன் கடத்தல் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உயிராபத்தும் ஏற்பட்டிருக்கும். அத்தகையதொரு சூழலை மாற்றி, மக்கள் நலன் சார் அரசாங்கமொன்றை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். மக்களுடன் இணைந்து கட்டியெழுப்பப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டிற்குப் புதியதொரு மாற்றம் கிடைத்துள்ளதுடன், வலுவானதொரு எதிர்காலம் உருவாக்கப்பட்டுள்ளது என அண்மைய நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment